விபத்துக்களை தவிர்த்துக் கொள்வோம்

இன்று எந்த செய்திகளைப் பார்த்தாலும், கேட்டாலும், இணையப்பக்கங்களில் உலாவினாலும் ஏதாவதொரு விபத்து பற்றிய செய்திகளை காணத்தவறுவதில்லை. அதிகரித்த சனத்தொகைக்கு ஏற்ப விபத்துக்களும் அதிகரித்து கொண்டே செல்கின்றன. உலகின் எந்த மூலையிலும் நாளைக்கு ஒரு விபத்தாவது இடம்பெற்றக் கொண்டுதான் இருக்கின்றது. 

விபத்துக்கள் இரண்டு விதமாக ஏற்படுத்தப்படுகின்றது. மனித நடத்தைகளாலும், இயற்கையான முறையிலும் ஏற்ப்படுத்தப்படுவதனைக் காணலாம். இயற்கையாக ஏற்படுத்தப்படுபவை அனர்த்தங்கள் என அழைக்கப்படுகின்றது. நாம் மனித நடத்தையினால் ஏற்படுத்தப்படும் விபத்துக்கள் பற்றிப் பார்போம்.

 விபத்துக்கள் எதிர்பாராத விதமாக எமது கவனயீனத்தினால் ஏற்ப்படுத்தப்படுகின்றது. எமது சாதாரண இல்லம் தொடங்கி பாரிய தொழிற்சாலைகள், வீதிகள், பாடசாலைகள், விண்வெளிகள், வேலை ஸ்தலங்கள் போன்ற அனைத்திலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இவ்விபத்துக்கள் பல்வேறு காரணங்களினடிப்படையில் ஏற்படுத்தப்படுகின்றன.
1.    கவனயீனம்
2.    நாம் கையாளும் பொருள் பற்றிய அறிவின்மை
3.    உரிய சட்டதிட்டங்களை கடைப்பிடியாமை
4.    மதுபாவனைப் பழக்கம்
5.    நித்திரைத்தூக்கத்தில் வாகனம் செலுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

    எனவே விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணங்களை அறிந்து நிதானமாகச் செயற்படுவதன் மூலமாக அதிகமான விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளலாம்.
(ஆக்கம்: அ.பிரசாந்தன், கிழக்குப் பல்கலைக்கழகம்)


Previous Post Next Post